டிஆர்பியில் இந்த வாரத்தில் எந்தெந்த தொடர் முதல் 10 இடங்களை பிடித்திருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

விலகிய ஜீ தமிழ்

முன்னணி சேனல்களாக இருக்கக்கூடிய சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. எப்பொழுதும் டிஆர்பியில் இந்த மூன்று சேனல்கள் இருக்கக்கூடிய தொடர்களே முதல் 10 இடங்களை பிடித்து வரும். ஆனால் இந்த முறை இந்த போட்டியில் இருந்து ஜீ தமிழ் விலகிவிட்டது. விஜய் மற்றும் சன் டிவி தொடர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிஆர்பியில் முந்தியுள்ளது.

டாப் தொடர்கள்

டிஆர்பி போட்டியில் முதல் இடத்தை பிடித்திருப்பது ‘கயல்’ தொடர். இந்த தொடர் தோழியே மனைவியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் தொடராகும். இரண்டாவது இடத்தை ‘வானத்தைப் போல’ தொடர் பிடித்துள்ளது. அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மூன்றாவது இடத்தில் ‘சுந்தரி’ தொடரும், நான்காவது இடத்தில் ‘எதிர்நீச்சல்’ தொடரும் இடம்பெற்றுள்ளது.

டாப் ரேட்டிங்

ஐந்தாவது இடத்தில் ‘இனியா’ தொடரும், ஆறாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரும், ஏழாவது இடத்தில் ‘மிஸ்டர் மனைவி’ தொடரும், எட்டாவது இடத்தில் ‘ஆனந்த ராகம்’ சீரியலும், ஒன்பதாவது இடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலும் உள்ளது. புது சீரியல் ஆன ‘சிறகடிக்கும் ஆசை’ தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மற்ற பிரபலமான சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு டாப் 10 லிஸ்டில் பத்தாவது இடத்தில் ‘சிறகடிக்கும் ஆசை’ தொடர் இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here