முத்தக் காட்சியில் நடிப்பதெல்லாம் தனக்கு ஒரு மேட்டரே இல்லை என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
மலையாளத்தில் பிஸி
தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும், மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்தார் நடிகை அமலா பால். அதன்பிறகு தெய்வ திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி என்று அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தார். சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார் அமலா பால். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவரது நடிப்பில் ஆடு ஜீவிதம் என்ற மலையாளத் திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இப்படத்தில் அமலாபால், பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
கதைக்கு முக்கியத்துவம்
ஆடு ஜீவிதம் பட டிரெய்லரில் இருந்த லிப் லாக் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டு வரும் அமலா பாலிடம், இந்த முத்தக் காட்சியை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமலா பால் கொடுத்த பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. நடிகை அமலா பால் கூறியிருப்பதாவது, “ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொன்னபோது இந்த முத்தக்காட்சியை பற்றியும் என்னிடம் கூறினார்கள். படத்திற்கும், கதைக்கும் இது தேவை என்பதால் நானும் நடித்தேன். கதைக்கு தேவை என்பதற்காக நான் நிர்வாணமாகவே நடித்திருக்கிறேன். முத்தக்காட்சி எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை” என்று பதில் கூறியுள்ளார் அமலாபால்.