நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாக இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

திரில்லர் நாயகன்

வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. உதயன், மௌனகுரு, டிமான்டி காலனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். க்ரைம் திரில்லர்களுக்கென்று பெயர் போன இவர் சமீபத்தில் நடித்த டி ப்ளாக், தேஜாவு, டைரி உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது இவரது நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன்.

3 மில்லியன் வியூஸ்

2019 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் இயக்குநர் சை.கௌதமராஜ். தற்போது இவர் இயக்கியுள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்திலேயே மூன்று மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஆக்சன், கிராமத்து சப்ஜெக்ட்டாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here