நடிகை சிம்ரன் பாட்டு பாடும் பழைய வீடியோ ஒன்று த்ற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கனவுக்கன்னி சிம்ரன்

1997 ஆம் ஆண்டு நடிகையாக தனது கெரியரை துவங்கிய சிம்ரன், விஐபி, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள் என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஆரம்பத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். இவரது எதார்த்தமான நடிப்பும், ஸ்டைலான நடனமும் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இன்றும் இருந்து வருகிறார் சிம்ரன். ஹீரோக்களுக்கு சரிசமமாக நடனமாடும் நடிகைகளின் லிஸ்டில் நம்பர் 1இல் இருப்பவர் சிம்ரன்.

வேற லெவல் ஹிட்

துள்ளாத மனமும் துள்ளும், வாலி, கனவே கலையாதே, ஜோடி, டைம், பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட பல படங்களை ஹிட் கொடுத்தார். இது மட்டும் இல்லாமல் எதிரும் புதிரும் படத்தில் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலில் ஆடி ரசிகர்களை ஏங்க வைத்தார். சிம்ரன் ரசிகர்களின் ஃபேவரிட் ஹிட் லிஸ்டில் அந்த பாடல் கண்டிப்பாக இன்றும் இடம் பெற்று இருக்கும். அந்த அளவிற்கு அந்த பாடலும், நடனமும் பிரபலமானது. பம்மல் கே சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்புக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது.

அசத்தும் சிம்ரன்

2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயானார் சிம்ரன். அதன் பிறகும் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர், வாரணம் ஆயிரம், பேட்ட, ராக்கெட்டரி, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘அந்தகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் ‘துருவ நட்சத்திரம்’, ‘வணங்காமுடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளது. தமிழில் மட்டும் 50 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார் சிம்ரன். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் கலக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை சிம்ரனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகின்றது. இவரது நடிப்பில் வெளியான விஐபி படத்தில் இருந்து ‘மின்னல் ஒரு கோடி’ என்ற பாடலை பாடிய பழைய வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here