குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனில் வெளியேறுபவர் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

வெற்றிகரமான குக் ஷோ

விஜய் டிவியில் சமையலுடன் இணைந்து காமெடி ஷோவாக ஒளிபரப்பாகி வருவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. காமெடி ஷோ என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

குக், கோமாளி

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கப்பூர் தீபன், ஜி.பி. முத்து, ஓட்டேரி சிவா, மோனிஷா, ரவீனா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். குக்குகளாக இருந்த கிஷோர் ராஜ்குமார், ராஜா ஐயப்பா, வி.ஜே. விஷால், காளையன் ஆகியோர் வெளியேறிய நிலையில், தற்போது ஷெரின், சிவாங்கி, விசித்ரா ஆண்ட்ரியன், மைன் கோபி, சுருஷ்டி ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.

எலிமினேஷன் இவரா ?

கடந்த வாரம் நடந்த இம்யூனிட்டி சுற்றில் ஷகிலா, ரோஷினி, ரேகா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை ஷகிலா வென்றார். இம்யூனிட்டி சுற்றில் வென்றவர்கள், அடுத்து எலிமினேட் செய்யப்படுபவர்களை காப்பாற்றுவது வழக்கமான ஒரு விஷயம். இந்த வார ப்ரோமோவில் சிவாங்கி, சுருஷ்டி, ஷெரின் எலிமினேஷன் சேலஞ்ச்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் ஷெரின் வெளியேற போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here