சின்னத்திரை நடிகை ரீமா அசோக் புது கார் வாங்கியுள்ளார்.

விஜய் டிவி பிரபலம்

கல்யாண முதல் காதல் வரை, ரெக்க கட்டி பறக்குது மனசு, சின்ன தம்பி, நாச்சியார்புரம் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளவர் நடிகை ரீமா அசோக். நடிகையாக மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் புதிய கார் வாங்கியுள்ளார் நடிகை ரீமா.

கார் பிரியர்கள்

டாடா ஹரியர் மாடல் கார் வாங்கியுள்ளதை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதன் விலை மதிப்பு 20 முதல் 24 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஷோரூமுக்கு இவர் சென்று புதிய கார் வாங்கிய புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. சமீப காலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் புதிய கார் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ரட்சிதா புதிய கார் வாங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here