மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள மாதவனின் மகனுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

வாழ்க்கை வரலாறு கதைகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மாதவன். ஆரம்ப காலத்தில் காதல், ஆக்சன், சென்டிமென்ட் என்று அனைத்து விதமான படங்களிலும் நடித்து வந்த நடிகர் மாதவன் தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சித்தார்த் மற்றும் நயன்தாராவுடன் டெஸ்ட் என் ஸ்போர்ட்ஸ் படத்திலும் நடித்து வருகிறார் சமீபத்தில் இவரது மகன் வேதாந்த் 58வது MILO/MAS மலேசியா இன்விடேஷனல் ஏஜ் குழு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 5 தங்கப்பதக்கங்கள் வென்ற சாதனை படைத்தார்.

வாழ்த்திய விஜயகாந்த்

5 தங்கப்பதக்கங்கலாய் வென்று சாதனை படைத்த வேதாந்த்திற்கு பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் மாதவனின் மகனுக்கு வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது,” மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் 17 வயது மகன் வேதாந்த் 50, 100, 200, 400 மற்றும் 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் ,இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜயகாந்த் பதிவிட்டுள்ளார். தற்போது இவரது பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here