வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த நடிகை ஹுமா குரேஷி தனது திருமணம் குறித்து கூறியுள்ளார்.
திருமணம் எப்போது
ஹிந்தி, மராத்தி படங்களில் நடித்து வந்த ஹுமா குரேஷி, காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் ஹீமா குரேஷி நடித்திருந்தார். தற்போது ஹிந்தி படங்களிலும், வெப் தொடர்களிலும் நடிப்பதில் பிஸியாக இருந்து வரும் இவர், தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
திருமண கட்டாயம் இல்லை
பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஹுமா குரேஷி எங்கு சென்றாலும் எப்போது உங்களுக்கு திருமணம் என்ற கேள்வியை சந்தித்து வருகிறார். இந்த கேள்விக்கு ஹுமா குரேஷி பதில் கூறுகையில், “ஹிந்தி பிரபலங்கள் பலரும் திருமணம் செய்து வருவதால், எனக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி நான் எங்கு சென்றாலும் கேட்கின்றனர். திருமணத்திற்காக நான் அவசரப்படவில்லை. சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று யாரும் என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை. அதனால் எனக்கு ஏற்ற சரியான நபருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்றவர் போல் ஒருவரை சந்தித்தால், அவர் தான் நமக்கு சரியானவர் என்று எனக்கு தோன்றினால் திருமணம் செய்துகொள்வேன். அதுவரை திருமணம் குறித்து நான் யோசிக்கக்கூட மாட்டேன்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார் ஹுமா.