விஜய் டிவியில் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சி இந்த வாரம் துவங்க உள்ளது.

தமிழ் பேச்சு

தமிழர்களுக்கு தமிழ் ஒரு மொழியாக மட்டும் இல்லாமல் வாழ்க்கையாகவும், தனது அடையாளமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி நிறுவனம் தமிழை மையப்படுத்தி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. அதுதான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சி. ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தின் சிறந்த பேச்சாளரை உருவாக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இதுபோல் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிகழ்ச்சியை படைப்பது இதுதான் முதல்முறை.

தமிழில் போட்டி

தகுதிச்சுற்று, தமிழ் எழுத்து, வார்த்தை, வாக்கியம் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த சீசன் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் அதற்கான இரண்டாம் சீசனின் ப்ரோமோவை விஜய் டிவி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சி, திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை என பல இடங்களில் திறமையான தமிழ் சொற்பொழிவாளர்களுக்கான செலக்சன்ஸ் நடைபெற்றது. சுமார் 2500-க்கும் மேற்பட்ட திறமையாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில், சுமார் 250 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதல் 25 போட்டியாளர்கள் ஏப்ரல் 16ஆம் தேதி மேடை ஏற உள்ளனர். சிறந்த போட்டியாளராக தேர்வு செய்பவருக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக ஞானசம்பந்தம் மற்றும் பர்வீன் சுல்தானா நடுவர்களாக உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் மற்றும் அனிதா சம்பத் தொகுத்து வழங்குகின்றனர். இந்த புதிய நிகழ்ச்சியானது ஏப்ரல் 16ஆம் தேதி ஞாயிறு காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here