நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஹிட்டான ஜெமினி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய விக்ரம். ஆரம்ப காலத்தில் தனது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க மிகவும் போராடினார். 90களில் நடிக்க துவங்கிய விக்ரம் பல படங்கள் நடித்து இருந்தாலும் சிறந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பல போராட்டங்களை சந்தித்தார். சேது படத்தில் இவரது நடிப்பை பார்த்த பிறகு தான் தமிழ் திரையுலகமே வியந்தது. அதன்பிறகு தில், காசி என்று வெற்றி படங்களை கொடுத்து வந்த விக்ரமுக்கு, ‘ஜெமினி’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மிகப்பெரிய ஹிட்

ஜெமினி திரைப்படம் வெளியானதிலிருந்து இன்று வரை தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விக்ரம். மகன் துருவ் ஹீரோவான பிறகும் விக்ரமிற்கு மவுசு குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். விக்ரமின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருந்த ஜெமினி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. சரண் இயக்கத்தில் விக்ரமுடன் நடிகை கிரண் கதாநாயகியாக நடித்திருந்தார். பரத்வாஜ் இசையமைத்து இருந்த இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “ஓ போடு” பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. மேலும் அந்தப் பாடலின் நடனமும், அந்த சிக்னேச்சர் ஸ்டெப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்த ஜெமினி திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து நடிகர் விக்ரமின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here