ஏப்ரல் 14 ஆம் தேதி வரும் சித்திரை முதல் தேதிதான் நம்முடைய புத்தாண்டு என்றும் ஜனவரி 1 ஆம் தேதி நம்முடைய புத்தாண்டு கிடையாது எனவும் நடிகை நமீதா தெரிவித்திருக்கிறார்.

கொஞ்சல் பேச்சு

2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா கெரியரை துவங்கிய நடிகை நமீதா, ‘எங்கள் அண்ணா’ என்ற விஜயகாந்த் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்து கவர்ச்சிக்கு குறைவில்லாமல் நடித்து வந்த நடிகை நமீதா, நான் அவன் இல்லை, வியாபாரி, பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இவர் கெரியரை தொடங்கிய நாள் முதலே இவரது கொஞ்சலான தமிழுக்கும், நடிப்பிற்கும் பல ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

குடும்ப வாழ்க்கை

பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும், தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அண்மையில் கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. நமீதா தற்போது நடிப்பிற்கு முழுக்குப்போட்டு விட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

கலாச்சாரமே கிடையாது

இந்த நிலையில், அவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் நமீத பேசியிருப்பதாவது; “பொதுவாக நாம் ஆங்கிலப் புத்தாண்டு அன்று நண்பர்களுடன் வெளியே சென்று புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் இந்த கொண்டாட்டத்தை செய்கிறோம். ஆனால் அது நம்முடைய கலாச்சாரம் கிடையாது. பண்பாடு கிடையாது. நம்முடைய புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரும் சித்திரை முதல் தேதிதான். ஜனவரி 1 ஆம் தேதி நம்முடைய புத்தாண்டு கிடையாது. அதனால் வரும் 14 ஆம் தேதி சித்திரை முதல் தேதியில் காலையில் எழுந்து, புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று புது வருடத்தை வரவேற்போம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். நமீதா இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here