ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ராஜா ராணி 2 தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் பரவுகின்றது.

டிஆர்பியில் டல்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களில் ராஜா ராணி 2 தொடரும் ஒன்று. ஏற்கனவே இதன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று முடிவடைந்தது. தற்போது இந்த தொடரின் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் சித்து, ஆலியா மானசா நடிப்பில் துவங்கிய இந்தத் தொடரில், பலமுறை கதாநாயகிகளை மாற்றிவிட்டனர். இதுவரை நல்ல டிஆர்பியில் இருந்த இந்த தொடர் சமீப காலமாக டிஆர்பியில் டல் அடிப்பதால் விரைவில் முடிக்க போவதாகவும் கூறுகின்றனர்.

கிளைமாக்ஸ் காட்சி

தற்போது இந்த தொடரில் சிவகாமி கொலை செய்த விக்கியின் கொலை வழக்கை சந்தியா விசாரித்து வருகிறார். ஆனால் சிவகாமியின் மொத்த குடும்பமும் இந்த கொலையை மறைப்பதற்காக நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றது. கடைசியாக சந்தியா சிவகாமி தான் கொலை செய்தார் என்பதை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க போகும் சீன் தான் இந்த தொடரின் கிளைமேக்ஸ் காட்சி என்று கூறுகின்றனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி இந்த தொடரின் கிளைமேக்ஸ் எபிசோட் ஒளிபரப்பாகும் என்றும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here