குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் கடந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. சமையல் நிகழ்ச்சியே வித்தியாசமாக இருக்கும் இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஷெரின், விசித்ரா, சுருஷ்டி, மைம் கோபி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர். மேலும் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி இதில் குக்காக மாறியுள்ளார். இதுவரை இந்த சீசனில் 20 எபிசோடுகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

வெளியேறப்போகும் போட்டியாளர்

குக் வித் கோமாளியில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா உள்ளிட்ட மூன்று போட்டியாளர்கள் இதுவரையில் எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் 4வது எலிமினேஷனுக்கான டாஸ்க் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வாரம் நடந்த இம்யூனிட்டி டாஸ்க்கில் மைம் கோபி வெற்றி பெற்றதால், இந்த வாரம் சமைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் விசித்ரா, ஷெரின், சிவாங்கி, சுருஷ்டி, விஷால் ஆகிய குக்குகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியுள்ளது. இந்நிலையில் விஷால் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக போவதாக கூறுகின்றனர். இதனால் விஷால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here