ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் சொப்பன சுந்தரி படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

காமெடி படம்

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘லாக்கப்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டிஜிட்டல் ரைட்ஸ்

சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். அந்த வகையில் தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா உள்ளிட்ட திரைப்படங்கள் ஐஸ்வர்யா ராஜூஷ்க்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக ‘சொப்பன சுந்தரி’ அமைந்துள்ளது. இப்படத்தில் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை பிரபல நிறுவனமான Disney+ Hotstar நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here