நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போடும் தசரா திரைப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.

பிரம்மாண்ட படைப்பு

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தசரா. ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செரு குரி இப்படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கியுள்ள இப்படத்திற்கு, இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். தசரா திரைப்படத்தில் நானி கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சமுத்திரகனி, சாய்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது.

வசூல் வேட்டை

மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில், உலக அளவில் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டியுள்ளது. இதனை படக் குழுவினர் போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த வாரத்திலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பத்து தலை, தசரா, விடுதலை ஆகிய படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகிய சமயத்தில், தசரா மற்றும் விடுதலை படங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here