SK24 படத்தில் டான்ஸ் இல்லை என்று சிவகார்த்திகேயன் கூறியிருப்பதால் சாய் பல்லவி ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் ஹிட் லிஸ்ட்

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள SK24 படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்க இருக்கின்றனர். மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான், பிரின்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் இணைந்து நடித்துள்ள அயலான் திரைப்படம் சூட்டிங் முழுவதும் முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணியில் உள்ளது.

டான்ஸ் இல்லை

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படமும் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள SK24 படத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடிக்க இருக்கிறார். சாய் பல்லவி என்று சொன்னவுடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய துள்ளலான நடனம் தான். ஆனால் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடனம் இல்லை என்று கூறி உள்ளார். அவர் சொன்ன இந்த விஷயம் சாய் பல்லவி ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது. விழா நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசி இருப்பதாவது, “சாய் பல்லவி ஒரு ஸ்டாண்டிங் பெர்ஃபாமர், அவர் என் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும்” இந்த வீடியோவை பார்த்தவுடன், ஒரு டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here