ரோகினி திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத விவகாரத்திற்கு வலுக்கும் கண்டனங்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பு

ரோகிணி திரையரங்கில் டிக்கெட் எடுத்தும் நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து வருகின்றது. கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் பத்து தல படம் நேற்று வெளியானது. சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படத்திற்காக ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து இருந்ததால் காலையிலேயே தியேட்டர்களில் மக்கள் குவிந்தனர்.

ஜீவி பிரகாஷ் கண்டனம்

சென்னையில் இருக்கும் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கத்திலும் பத்து தல படம் ரிலீஸ் ஆனது. நேற்று காலை 8 மணிக்கு படம் பார்க்க வந்த நரிக்குறவர் இன மக்களை டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்க ஊழியர் மறுத்துவிட்டார். இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியது, அதன் பிறகு ரோகிணி திரையரங்கில் நடந்த இந்த சம்பத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ரோகிணி திரையரங்கில் நடந்த சம்பவத்திற்கு தன் பக்க விளக்கத்தை அந்நிறுவனம் கொடுத்தும் ஏற்க மறுத்த மக்கள் அவர்கள் கொடுத்த விளக்கத்தையும், அவர்களையும் விளாசி வருகின்றனர். இந்நிலையில் சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த விஷயம் வெளிய வந்தவுடன் தனது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ,”அந்த சகோதரியும் சகோதரர்களும் பெண் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என பதிவிட்டு இருந்தார்.

விஜய் சேதுபதி விளாசல்

நடிகர் விஜய் சேதுபதி நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தபோது இதை தொடர்பான கேள்வி அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி “யாரும் யாரையும் ஒடுக்கப்படுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எங்கு நடந்தாலும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனுஷ பயலுங்க ஒன்னா வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்ருக்கு” என்று பதில் அளித்தார்.

பிரியா பவானி சங்கர் ட்விட்

பத்து தல படத்தின் நாயகியான பிரியா பவானி சங்கர் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டுப் போறப்போ, டிக்கெட் இருக்ககுல்ல, ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னனு கேட்ட அந்த குரல் தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடைதான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவரகள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு” என குறிப்பிட்டுள்ளார்.

கமல் ஹாசன் கண்டிப்பு

நடிகர் கமல் ஹாசன் தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,”டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.” என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினி பேரக்குழந்தைகள் பாக்கலாமா?

இந்த பர்சை குறித்து இனொரு புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது. அதாவது ரஜினியின் குடும்பம் ஒட்டு மொத்தமாக பேரக்குழந்தைகள் உட்பட பத்து தல படத்தை பார்க்கும் புகைப்படம் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதாவது படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் நரிக்குறவர் இன குழந்தைகளை அனுமதியில்லை என்று கூறிய தியேட்டர் நிர்வாகம் ரஜினியின் பேரக் குழந்தைகளை மட்டும் எப்படி உள்ளே அனுமதித்தது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here