பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் கோபி பாக்யாவிற்கு சாதகமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

பல போராட்டங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கு மத்தியில் பாக்கியலட்சுமி தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இது பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது. எப்போதும் சமையல் செய்து கொண்டு உலக அறிவே இல்லாத பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, நீண்ட வருடம் காதலியாக இருக்கும் ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறார் கோபி. அதற்குப் பிறகு பல போராட்டங்களைக் கடந்து சாதனைகளை செய்து வருகிறார் பாக்கியா. அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தை தனி ஆளாக நின்று காப்பாற்றியும் வருகிறார். சமீபத்தில் ராதிகா வேலை செய்யும் நிறுவனத்தின் கேன்டீன் ஆர்டரையும் பெறுகிறார் பாக்கியா.

பாக்யாக்கு சப்போர்ட்

ஆங்கிலம் பேச தெரியாத பாக்கியாவை ராதிகா ஏளனமாக பேசியதால் ஆங்கிலம் கற்கும் வகுப்பில் சேர்ந்து ஆங்கிலம் பேச தொடங்குகிறார் பாக்கியா. அது மட்டும் இல்லாமல், எப்போதும் புடவையிலேயே இருக்கும் பாக்கியாவை பார்த்து, ராதிகா அனைவரும் யூனிபார்ம் அணிய வேண்டும் அதுவும் சுடிதார் தான் அணிய வேண்டும் என்று கூறி கட்டளையிடுகிறார். அப்படி இல்லை என்றால் கேன்டீனை காலி செய்துவிடும்படி கூறுகிறார். சுடிதார் அணிய தன் மாமியாரிடம் பர்மிஷன் வாங்கி சுடிதார் போட தொடங்குகிறார் பாக்கியா. இவ்வாறு பாக்கியாவை வெறுப்பேற்ற நினைத்து ராதிகா கூறும் ஒவ்வொரு விஷயமும் பாகிக்யா சாதிக்க காரணமாக அமைந்து விடுகிறது. சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் தன் நண்பர்களுடன் பர்சேஸ் சென்ற பாக்கியாவை பார்த்த கோபியின் நண்பர், பாக்கியாவை வேறு ஒரு நபருடன் பார்த்ததாக போட்டோவும் எடுத்து அதை வாட்ஸ் அப்பில் கோபிக்கு அனுப்புகிறார். இதை பார்த்த கோபி கடுப்பாகி பாக்கியாவை ஃபாலோ செய்து வந்து மிரட்டுகிறார். இதனால் கோபமடையும் பாக்கியா உங்களுக்கும் எனக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது சார், இனிமே நீங்க என்னை ஃபாலோ செய்ய வேண்டாம் என்று கூறி “டோன்ட் ஃபாலோ மீ” என்று ஆங்கிலத்தில் கோபியை மிரட்டி விட்டு செல்கிறார்.

திடீர் சப்போர்ட்

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியா தொடரில், கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் அடிக்கடி தனது கதாபாத்திரம் குறித்தும், அந்த எபிசோடுகள் குறித்தும் தனது கருத்துக்களை முன்வைத்து வருவார். அவ்வாறு சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், “பெண்கள் என்றால் பாக்கியா போல் இருக்க வேண்டும் யாருக்கும் பயப்படக்கூடாது. ஏன் பயப்பட வேண்டும்? ஆண்கள் செய்தால் சரி, பெண்கள் செய்தால் தவறா? பாக்கியா செய்வது தான் சரி. கோபி கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இருந்தாலும் கோபி செய்தது மிகப்பெரிய தவறுதான்”. இவ்வாறு பாக்கிய கதாபாத்திரத்தை உயர்த்தி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here