தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முழக்கம் 

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. பட்ஜெட் வாசிக்க தொடங்கும் முன்னரே சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிக்க கோரி அதிமுகவினர் முழக்கமிட்டனர். ஆனால் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அதுவரை அதிமுகவினர் அமைதிக்காக்கும்படியும் சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.

வெளிநடப்பு

ஆனால், பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தலுக்கு செவி சாய்க்காமல் தமிழக பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, அதிமுகவினர் அமளிக்கு மத்தியில் தொடர்ந்து 3வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here