‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், திடீரென இந்தப்படத்திற்கு விக்னேஷ் சிவன் உருவாக்கிய கதை, அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு பிடிக்காததால் அவர் ‘ஏகே 62’ படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. மேலும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘நானும் ரவுடிதான்’ பட கண்ணான கண்ணே பாடலின் ‘கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்குறதும், அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி’ என்ற வரிகளை பகிர்ந்து “சில வரிகள் ஆழமான அர்த்தங்கள் கொண்டவை” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here