விறுவிறுப்பாக நடந்து வரும் சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

மெகா ஹிட் வெற்றி

2005 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா போன்ற பலரும் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சந்திரமுகி. நடிகர் வடிவேலுவின் காமெடி இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சந்திரமுகி படத்தை எழுதி, இயக்கியவர் பி. வாசு. வித்யாசாகர் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வி மிஸ் யு கங்கனா

சந்திரமுகி படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டத்தில் இருந்த பி.வாசு, சமீபத்தில் அதன் படப்பிடிப்பை தொடங்கினார். சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்தார். விறுவிறுப்பாக நடந்து வரும் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகியது. இந்நிலையில் மும்பையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் நடிகை கங்கனா ரனாவத்தின் போஷனும் முடிந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக மிஸ் யூ கங்கனா என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி அதன் வீடியோவும், புகைப்படங்களும் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here