1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா தொடர் முடிவுக்கு வர உள்ளது.

கடந்த 1000 எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகளிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இரட்டை ரோஜா. அக்ஷய் கமல், சாந்தினி உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. சமீபத்தில் 1000 எபிசோடை கடந்த இந்த தொடர் தற்போது முடிவுக்கு வர உள்ளது. மார்ச் 17 உடன் இந்த தொடர் முடிய இருப்பதால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மத்த சீரியல்களின் நேரங்களும் மாற்றப்பட்டு உள்ளது.

நேரம் மாற்றம்

மார்ச் 18 சனிக்கிழமை முதல் “கனா” சீரியல் மதியம் 1:30 மணி முதல் 2:15 மணி வரை என 45 நிமிடங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதனைத் தொடர்ந்து “தெய்வம் தந்த பூவே” தொடர் மதியம் 2:15 மணி முதல் 3:00 மணி வரை என 45 நிமிடங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த “கன்னத்தில் முத்தமிட்டால்” தொடரும் சனிக்கிழமை முதல் 3:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ரியா விஸ்வநாதன் நடிக்கும் “சண்டக்கோழி” சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கின்றது. இரட்டை ரோஜா சீரியல் முடிவுக்கு வருவதால் அனைத்து சீரியல்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here