பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய வில்லியாக (வெண்பா) ஃபரீனா ஆசாத் என்ட்ரி கொடுத்துள்ளார்.

வெண்பா என்ட்ரி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடரின் முதல் சீசன் முடிவடைந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கின்றது. இதில் ரோஜா தொடரில் ஹீரோவாக நடித்த சிபு சூரியன் பாரதி கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். கண்ணம்மாவாக வினுஷா தேவி நடிக்கிறார். துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஃபரீனா ஆசாத், இந்த தொடரின் முதல் சீசனில் பாரதியையும், கண்ணம்மாவையும் சேர விடாமல் தவிர்க்க பல சதிவேலைகளை செய்து வந்த நிலையில், தற்போது சீசன் 2விலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அனல் பறக்கும் ப்ரோமோ

புதிதாக தொடங்கப்பட்ட இந்த தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பல குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது ஃபரீனாவின் என்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பாரதியை ஒருதலையாக காதலித்து வரும் வெண்பா (ஃபரீனா ஆசாத்) என்ன என்ன வில்லத்தனம் செய்யபோகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் வெண்பா, தன்னுடன் படித்த தோழியை கூட நினைவில்லாதது போல் நடித்து, அவர் பேசுவதால் எரிச்சல் அடைந்து கன்னத்தில் அறைகிறார். இந்த ப்ரோமோ அனல் பறப்பதுடன், ஃபரீனாவின் நடிப்பும் சூப்பராக இருக்கிறது. இனி என்னென்ன வில்லத்தனம் காத்திட்டு இருக்கோ என்று பாரதி கண்ணம்மா ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here