ஆஸ்கர் விருதை வென்றுள்ள RRR திரைப்படக்குழு மற்றும் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ அவணப்படக்குழுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாபெரும் வரவேற்பு

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ திரைப்படம், கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. RRR திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது. எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்.

ஆஸ்கர் விருது

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.`நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் ரசிகர்கள், திரையுலகினர் உற்சாகத்தில் உள்ளனர்.

சிறந்த ஆவணப்படம்

இதேபோல், யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘The Elephant Whisperers’ ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

வாழ்த்து

ஆஸ்கர் விருதுகளை பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது ‘நாட்டு நாட்டு’ பாடல். இந்த மகத்தான சாதனையை படைத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

அனைத்து விருதுக்கும் தகுதியானது

மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில்; முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் வென்றதற்கு வாழ்த்து. முதன்முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here