நடிகர்கள் விஜய், சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பிஸி ஷூட்டிங்

விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். காஷ்மீரில் லியோ படப்பிடிப்பை முடித்து திரும்பிய இயக்குநர் மிஷ்கின், படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும், தனது அனுபவத்தையும் பகிர்ந்து இருந்தார். தற்போது லியோ படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் லோகேஷ், கைதி 2, விக்ரம் 2 என அடுத்தடுத்து படங்களை வரிசையில் வைத்துள்ளார்.

சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் விஜய்

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய், நடிகர் சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. சூட்டிங் இன்டெர்வல் சமயத்தில் விஜய் பேசி சிரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் விஜய் புகைப்படங்களை ரசிகர்கள் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர். காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வரும் லியோ படத்தின் சூட்டிங்கில் சஞ்சய் தத் பங்கேற்க வரும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here