ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 100 நாட்கள் ஆனதை தொடர்ந்து, அப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த அணைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகரான சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.

ஆக்ஷன் காட்சிகள்

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ரஜினி ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 100 நாட்கள் ஆனதை தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்தின் சண்டைக் காட்சிகள் நிறைந்த அந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here