எதிர்நீச்சல் தொடரில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை வைஷ்ணவி ரசிகர்களுக்கு தனது காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

பல திருப்பங்கள்

தொலைக்காட்சிகளில் டாப்பாக இருக்கக்கூடிய சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் எதிர்நீச்சல் என்ற தொடர் ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளது. தினம் தினம் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த தொடர், இல்லத்தரசிகளை மட்டும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜனனி, ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து, தற்போது தமிழில் நடித்து வருகிறார்.

காதலர் அறிமுகம்

சின்னத்திரை தொகுப்பாளினி டிடி யின் அக்கா பிரியதர்ஷினி ரேணுகா கதாபாத்திரத்திலும், இந்த தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிகை கனிகாவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்தும் பாடகியாகவும் பிரபலமானவர். ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த நடிகை கனிகா, திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் இந்த சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடிகை வைஷ்ணவி நடித்து வருகிறார். அண்மையில் இவர் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் வைஷ்ணவி தனது காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here