தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
லால் சலாம்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘3’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பிறகு வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.
தீவிர உடற்பயிற்சி
லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இயக்குநராக மட்டும் இல்லாமல் பிட்னெஸ்சிலும் அதிக கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா, தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகளவில் ஒர்க் அவுட் செய்து வருகிறார். யோகா, சைக்லிங் என்று செய்து அசத்துகிறார். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வொர்க் அவுட் செய்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.