துணிவு படத்தில் நடித்ததற்காக நடிகை மஞ்சு வாரியருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் சில படங்கள்

அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் நடிகையாக இருக்கக்கூடியவர் நடிகை மஞ்சு வாரியர். அவர் துணிவு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அசுரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சு வாரியர். , தற்போது தமிழ் படங்களில் நடிப்பதற்கு, இவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சம்பளம்?

தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ள மஞ்சு வாரியர், துணிவு படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் தமிழில் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்திற்கு நிகராக மஞ்சு வாரியர் சம்பளம் வாங்கி வருகிறார் என்று சமூக வலைதளத்தில் பேச்சுக்கள் நிலவி வருகின்றது.

தொடரும் கூட்டணி

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்த மூன்றாவது படம் தான் துணிவு. இவர்களது கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இந்தக் கூட்டணி வலிமை படத்திலும் இணைந்தது. ஆனால் வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாத நிலையில், தற்போது துணிவு படத்தில் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் மொத்தமாக இந்த திரைப்படம் ரூ.330 கோடி வசூலித்துள்ளதாக தகவல்களும் வெளிவந்துள்ளது. நடிகை மஞ்சு வாரியாருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதும் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காகவே இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here