ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடி, போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடி பூரிப்பில் இருக்கும் நடிகை தமன்னா.

பல ஹிட் படங்கள்

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன் போன்ற பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய இவர், விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த நடிகை தமன்னா, தற்போது ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார். கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். நட்சத்திர பட்டாளமே இணைந்திருக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.

பூரிப்பில் தமன்னா

தெலுங்கிலும் போலா ஷங்கர் என்ற படத்தில் நடித்து வரும் தமன்னா, ஒரே சமயத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவியுடனும் தமிழ் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினியுடனும் இணைந்து நடித்திருப்பது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து நடிகை தமன்னா கூறி இருப்பதாவது ,”எனக்கு நடிகர் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு அந்த கனவு இப்போது நிறைவேறிவிட்டது. அதேபோல் சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. ஏற்கனவே அவருடன் நடித்திருந்தேன். ஆனால் அது சிறிய வேடம், தற்போது போலா சங்கர் படத்தின் மூலம் ஹீரோயினாக நான் நடிக்கிறேன். சிரஞ்சீவியுடன் நடனம் ஆட வேண்டும் என்று என்னுடைய ஆசையும் நிறைவேறி உள்ளது” என்று கூறியுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று அனைத்து மொழியிலும் படு பிஸியாக இருந்து வருகிறார் நடிகை தமன்னா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here