விஜய் டிவி வெளியிட்டுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், நான்காவது சீசன் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பல சின்னத்திரை நடிகர்கள் பிரபலமாகியும் உள்ளனர். தற்போது நான்காவது சீசன் துவங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் புதிய குக் மற்றும் கோமாளிகள் இணைந்துள்ளனர்.

உல்டாவாக மாறிய டீம்

கடந்த சீசனில் கோமாளியாக வந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறியுள்ளார். புகழ் மற்றும் மணிமேகலை உள்ளிட்ட பலரும் இந்த சீசனில் உள்ளனர். வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் டிவி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோக்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

வித்யாசமான சேலஞ்ச்

கடந்த வாரத்தில் பிரியாணி சேலஞ்சை சமாளித்து வந்த குக் மற்றும் கோமாளிகள், அடுத்தடுத்து வித்தியாசமான சேலஞ்ச்களை சந்தித்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள அடுத்த சேலஞ்சில் பிரான்சிலிருந்து பங்கேற்றுள்ள ஆன்ட்ரின் மற்றும் ஜிபி முத்து இணைந்து சிறப்பாக செயல்பட்டதாக ப்ரமோ வெளியாகியுள்ளது. கலகலப்பாக இருக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், அடுத்த வாரம் எபிசோடை மிஸ் செய்யாமல் இருப்பதற்கான வழியை விஜய் டிவி எடுத்துள்ளது. இந்த கலகலப்பான ப்ரோமோ பல லைக்குகளை குவித்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here