விஜய், திரிஷா நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் டைட்டில் டீசர் வெளியான இரண்டே நாட்களில் 36 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இணைந்த பிரபலங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிக்கும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் போன்ற பலரும் இணைந்துள்ளனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இணையும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி உள்ளது. அதற்கு காரணம் மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் சொல்லலாம்.

ட்ரெண்டில் லியோ

‘லியோ’ திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக பட குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். அவர்கள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டதுடன், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களைப் பெற்ற ஏஜென்ட் டீனாவும் இந்த படத்தில் இணைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய், திரிஷா இருவரும் இணைந்து பல படங்கள் நடித்து பிளாக் பஸ்டர் ஆன நிலையில், இந்த படமும் சாதனைகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ‘லியோ’ படத்தின் டைட்டில் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இது 24 மணி நேரத்திற்குள் 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. டீசர் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் தற்போது 36 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here