ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ஹோட்டல் ஊழியர்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கும் இந்த படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப், தெலுங்கு நடிகர் சுனில், நடிகை தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார்.

லுங்கி டான்ஸ்

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அடுத்தகட்டமாக ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் ராஜஸ்தான் சென்றுள்ளார். அங்கு தான் தங்கும் ஹோட்டலுக்கு சென்ற ரஜினிகாந்த்துக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஹோட்டல் ஊழியர்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடி ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். லுங்கி டான்ஸ் பாடலில் தலைவா என்ற வார்த்தை வரும்போது ஊழியர்கள் தங்களது குரலில் தலைவா என்ற முழக்கங்களுடன் வாழ்த்தினர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here