மத்டிய நிதியமைச்ச நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட்

2023-2024 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது யூனியன் பட்ஜெட் இது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்.

புதிய இந்தியாவுக்கான அடித்தளம்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; “நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் சிறப்பான பட்ஜெட். அனைவருக்கும் பலன் அளிக்கும் பட்ஜெட். புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்புக்கும் பலனளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவுத் துறைக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்தது பாராட்டத்தக்கது. சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள், பழங்குடியினர் பலன் பெறுவார்கள். வேளாண் துறையில், டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்த மத்திய பட்ஜெட்டி வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here