உலகளவில் அனைவராலும் கவரப்பட்ட “டைட்டானிக்” திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாக உள்ளது.

மனம் கவர்ந்த காதல் கதை

பிரபல பாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 1997-ம் அண்டு வெளியான திரைப்படம் “டைட்டானிக்”. உலகையே ரசிக்கச் செய்த காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தி,ல் லியோனர்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்திருந்தனர். அண்டார்டிகா பகுதியில் பயணிக்கும் டைட்டானிக் எனும் கப்பலில் நடக்கும் காதல் கதையை கொண்ட இப்படம், 11 ஆஸ்கர் விருதுகளையும், கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளது.

நவீன தொழில்நுட்பம்

இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு, 4கே 3டி போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டுள்ள “டைட்டானிக்” திரைப்படம் மீண்டும் வெளியாக இருக்கிறது. பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “டைட்டானிக்” படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here