நடிகர் அஜித் உடனான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகை மஞ்சு வாரியர் அதில் நன்றி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படமும், விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படமும் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உச்ச நடிகர்களின் இரண்டு படங்களும் ஒரே தினனத்தில் வெளியானதால், அவர்களது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தல – தளபதி என்ற கோஷத்தோடு உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள், அவர்களது கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து அதகளப்படுத்தினர். உலகளவில் திரையரங்குகளில் வெளியான ‘துணிவு’ – ‘வாரிசு’ இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

புகைப்படங்கள் வைரல்

இந்த நிலையில், ‘துணிவு’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ‘உங்களுடன் இருந்ததற்கு நன்றி’ என அவர் குறிப்பிட்டுள்ளார். மஞ்சு வாரியரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here