பிரபல நடிகை தமன்னா இந்தி நடிகர் ஒருவர் காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகை

17 வருடங்களாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, பாகுபலி போன்ற பல மெகா ஹிட்டான படங்களையும் கொடுத்துள்ளார். 17 வருட சினிமா பயணத்தில், பல ரசிகர்களை அவர் தன் வசம் வைத்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகருடன் காதல்?

இந்த நிலையில், இந்தி நடிகர் விஜய் வர்மாவும், நடிகை தமன்னாவும் காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. புத்தாண்டை கொண்டாட கோவா சென்றிருந்த தமன்னா, அங்கு விஜய் வர்மாவை கட்டிப்பிடித்து முத்தமிடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த முத்த வீடியோ இருவரும் காதலிப்பதை உறுதி செய்து இருப்பதாக திரை உலகினரும், ரசிகர்களும் பேசி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here