“பிளட் ஆர்ட்” எனப்படும் ரத்தத்தில் ஓவியம் வரைவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விலை மதிப்பற்றது

ஓவியம் அற்புதமான வரைகலை… இந்த ஓவியத்தின் மதிப்பை உயர்த்துவதாக நினைத்து உதிரத்தை கொண்டு ஓவியம் வரைவது புதிய கலைவடிவமாக பார்க்கப்பட்டது. சம்பந்தப்பட்டவரின் சுய விருப்பத்துடன் உடலில் இருந்து ஊசியால் ரத்தம் எடுத்து, அதனை மையாக்கி அவரது மனதை கவர்ந்தவர்களின் ஓவியத்தை சில ஆயிரம் செலவில் வரைந்து கொடுத்து வந்தனர்.

திடீர் ரெய்டு

சென்னை தியாகராய நகரில் தி பிளட் ஆர்ட் என்ற பெயரில் இதற்காக பிரத்யேக வரைகலை கூடமும் இயங்கி வந்தது. கையில் கயிற்றை கட்டி சிரிஞ்சால் நரம்பில் குத்தி ரத்தத்தை உறிஞ்சி அதன் மூலம் அவர்கள் விரும்பும் நபர்களின் படத்தை வரைந்து கொடுத்து பணம் வசூலித்து வருவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் குவிந்தது. இதனைதொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தியாகராய நகரில் உள்ள அந்த வரைகலை கூடத்திற்குள் புகுந்து ரத்தம் எடுக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களையும், இதற்கு முன்பாக ரத்தத்தில் வரைந்த ஓவியங்களையும் பறிமுதல் செய்ததோடு, உயிர் காக்க உதவும் ரத்தத்தை கொண்டு இனிமேல் விபரீத ஓவியங்களை வரையக்கூடாது என்று எச்சரித்து சென்றனர்.

தடை

இதற்கிடையே ரத்தத்தில் ஓவியம் வரைவது தவறு எனவும் அப்படி செய்தால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதொடர்பாக பேசிய அவர், மனித உடலில் இருந்து ரத்தத்தை டாக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் எடுக்க வேண்டும். தவறான முறையில் ரத்தம் எடுப்பது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் தமிழகத்தில் “பிளட் ஆர்ட்” வரைய தடை விதிக்கப்படுகிறது. ரத்தத்தில் ஓவியம் வரைவதை நிறுத்தாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here