பொங்கல் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

சிறப்பு ரயில்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். அதற்காக அவர்கள் ரயில்களிலும், பேருந்துகளிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடுவர். வழக்கமான ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால், சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அறிவிப்புக்காக மக்கள் காத்திருந்தனர்.

மக்கள் ஏமாற்றம்

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – நாகர்கோவில், கொச்சுவேலி – தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையே 10 சிறப்பு ரயில்களும், மறு மார்க்கத்தில் 5 சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிச.,29-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டத்தை அடுத்து, சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், பலர் ஆன்லைனில் முன்பதிவு செய்ததால் அங்கு கூடிய மக்களில் 5 சதவிகிதம் பேருக்கு மட்டுமே முன்பதிவிற்கான டிக்கெட்கள் கிடைத்தன. முன்பதிவு தொடங்கிய 7 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால், மீதமுள்ள 95 சதவிகித மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here