மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வெளியாகியிருக்கும் அவதார் படத்தின் 2-ம் பாகமான ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ உலகளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

பிரம்மாண்ட படம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி, உலகம் முழுவதும் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. வசூலில் சாதனை படைத்த இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின்றன. ‘அவதார்’ படத்தின் 2-ம் பாகமான ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ திரைப்படம் ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த 16-ம் தேதி வெளியானது.

வசூலில் சாதனை

அவதார் – 2 திரைப்படம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ 10 நாட்களில் ரூ.300 கோடியைத் தாண்டியது. வரும் நாட்களில் ரூ.500 கோடி எதிர்பார்க்கப்படுகிறது. ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here