உதயநிதியிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று நடிகை நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.

கலகத் தலைவன்

தடம், மீகாமன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கலகத் தலைவன்’. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரச்சனை, பொறுப்பு

“கலகத் தலைவன்” திரைப்படத்தில் நடித்த நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது; “உதயநிதி சாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு பல பிரச்சினைகள் இருக்கும், பொறுப்பு இருக்கும். ஆனால், அதை அவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் கூட காட்டியதில்லை” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here