பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மும்பையில் ரூ.65 கோடி மதிப்பில் ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

வளரும் நடிகை

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் – மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர், தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதுடன் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ‘மிலி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரம்மாண்ட பங்களா

இந்நிலையில், ஜான்வி கபூர் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களை விலைக்கு வாங்கியுள்ளார். சுமார் ரூ.65 கோடியில் வாங்கப்பட்டுள்ள அந்த தளங்கள், 8,669 சதுர அடியில் 6421 சதுர அடி கட்டிட பரப்பளவை கொண்டது எனவும் இந்த தளங்களில் பிரம்மாண்ட நீச்சல் குளம் மற்றும் ஐந்து கார்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதி உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here