பிக்பாஸ் சீசன் ஆறிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன் என பிரபல திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி புகாழாரம் சூட்டியுள்ளார்.

பிக்பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது 6-வது சீசனை பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி வெளியேறி உள்ள நிலையில், தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளனர்.

ரசிகர்கள் ஏமாற்றம் 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிக்பாஸ் 6-வது சீசனின் வெற்றியாளர் ஜி.பி.முத்து தான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேலையில், அவர் வீட்டை விட்டு வெளியேறியது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஜி.பி.முத்து வைல்டு கார்டு மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

வெற்றி நாயகன்

இந்நிலையில், போட்டியாளர் ஜி.பி.முத்து வெளியேறியது குறித்து இயக்குநர் சீனுராமசாமி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்துவிட்டு தன் மகனுக்காக புகழ்வாய்ந்த சபையில், உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸ் சீசன் ஆறிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்” என கூறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here