விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது 6-வது சீசனை பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி வெளியேறி உள்ள நிலையில், தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இன்று நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க் தொடங்கி உள்ளது. இதில், ஒரு அட்டை பெட்டிக்குள் 19 பொம்மைகள் வைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த 19 பொம்மைகளில் போட்டியாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருக்கும். அதில் போட்டியாளர்கள் ஆளுக்கு ஒரு பொம்மைகளை எடுத்துக்கொண்டு அலமாறியில் வைக்க வேண்டும். அட்டை பெட்டியில் யார் பொம்மை கடைசி வரை எடுக்காமல் உள்ளதோ அவர் விளையாட்டை விட்டு வெளியேறுவார்கள். இன்று தொடங்கிய இந்த போட்டியில், ஜனனி பொம்மை டாஸ்கிலிருந்து வெளியேறுகிறார். இதனால், டென்ஷனான ஜனனி, என் கூட நல்லா பழகிட்டு இப்படி பண்ணா எனக்கு கஷ்டமா இருக்கும், என்ன மாதிரி கெட்டவள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது, என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது என்று வில்லத்தனமாக ஜனனி பேசி உள்ளது ய்ன்று வெளியான 2-வது பிரோமோவில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here