நடிகை ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

முன்னணி நடிகை

தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. அதன்பிறகு நிர்ணயம், ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் ரெஜினாவின் கைவசம் உள்ளன.

காதலிக்கவில்லை

ரெஜினா கசாண்ட்ரா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் ரெஜினா கூறியிருப்பதாவது; ”2020-ல் எனது காதல் முறிந்துபோனது. அதில் இருந்து விடுபட கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனோ, இல்லையோ என்பது எனக்கே தெரியாது. ஏனென்றால் சிறு வயது முதலே தனது காலில் சுயமாக வாழ்வது எப்படி என்பது பற்றி என் அம்மா என்னை பழக்கப்படுத்தி வைத்துள்ளார். எனவே வாழ்க்கையில் யாராவது வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here