தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, பின்னர் கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். தற்போது அம்மா, அக்கா, அத்தை என கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் அவர், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு மீனாவுக்கும் – வித்யாசாகர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி மரணமடைந்தார். கணவர் மரணத்தால் துயரத்தில் இருந்து வந்த நடிகை மீனாவுக்கு சினிமா நட்சத்திரங்கள் உட்பட ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நடிகை மீனா தனது நண்பர்களை சந்தித்துள்ளார். நண்பர்கள் தினத்தன்று தனது தோழிகளான ரம்பா, சங்கீதா, சங்கவி ஆகியோரை அவர் சந்தித்துள்ளார். அவர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், நடிகை மீனா அந்த துயரத்தில் இருந்த மீண்டு வந்தால் மகிழ்ச்சி என குறிப்பிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here