தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீப காலமாக உயர்ந்து கொண்டிருந்த தங்கம் விலை சிறிது காலம் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,728-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.7 உயர்ந்து ரூ.4,735-க்கும், ஒரு சவரன் ரூ.37,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து ரூ.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.800 குறைந்து ரூ. 60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.