அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.

பன்முக திறமை

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. மிரட்டல் வில்லன் முதல் காதல் நாயகன் வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும், சமீபகாலமாக அவரது வில்லன் வேடங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த ஜூன் 3 ஆம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வெளியான ‘மாமனிதன்’ திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஷாரூக்கானுடன் இணைந்து விஜய் சேதுபதி ‘ஜவான்’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

OTT ரிலீஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், அவரின் அடுத்த படம் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’19 (1) (a)’ என பெயரிடப்பட்டுள்ள மலையாளப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆண்டோ ஜோசப் ஃபிலிம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் இந்து இயக்கும் ’19 (1) (a)’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் இந்தப் படம் நேரடியாக Disney+ hotstar OTT தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here