லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடித்திருக்கும் “தி லெஜண்ட்”  திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆக்ஷன் ஹீரோவான சரவணன் 

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் சரவணன், விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக விளம்பரங்களில் தோன்றிய சரவணன், தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்து உள்ளார். தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக  மிக பிரமாண்டமான முறையில் பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து உள்ளது. “தி லெஜன்ட்” என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார்.

நடிகர் பட்டாளம்

அஜித்தின் உல்லாசம், விசில் படங்களை இயக்கிய ஜே.டி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து “தி லெஜண்ட்” படத்தை இயக்கி உள்ளனர். பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார், ஊர்வசி ரௌடேலா, கீர்த்திகா, விவேக், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மொசலோ மொசலு’ மற்றும் ‘வாடி வாசல்’ பாடல்கள் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது.

இணையத்தில் வைரல்

‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. வெளிநாட்டில் விஞ்ஞானியாக இருக்கும் லெஜண்ட் சரவணன் இந்தியாவில்  சாதனை புரிவதற்காக வருகிறார். பின்னர் எதிரிகளின் சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளுவது போல் கதை அமைந்துள்ளது. எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி, ஆட்டம் பாட்டம், பஞ்ச் வசனம் என சரவணன் மிரட்டியிருக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here