தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ராதாகிருஷ்ணன் சாலையில் அவர் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார். பின்னர் அவ்வழியே சென்ற மாநகரப் பேருந்தில் ஏறி பயணித்த முதலமைச்சர், பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பேருந்தில் இலவச பயணத்தின் மூலம் மாதம்தோறும் எவ்வளவு மிச்சம் வருகிறது எனவும் அவர் கேட்டறிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here